ஆரணியில் வரும் 30 தேதி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண வைபவம்!
ஆரணியில் வரும் 30 தேதி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண வைபவம் என திருமலை திருப்பதி தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருகோவிலில் , நாளை மறுநாள் ஆரணியில் நடைபெற உள்ள திருக்கல்யாணம் உற்சவம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சேகர் ரெட்டி கூறுகையில், சென்னை தீவுத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது என்றார்.
மேலும் வேலூர், ஆரணியில் ஏ.சி.எஸ் கல்வி குழுமம் சார்பில் ரூ.22 கோடி செலவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் 30 தேதி மாலை, ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதாக கூறினார்.
மேலும் படிக்க | முக்கண்ணனுக்கு ஆடி மாத காவடி: இது சிவனுக்கான காவடியாட்டம்
இந்நிலையில் திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம், பஸ் வசதி, தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறிய சேகர் ரெட்டி, 29ம் தேதியன்று திருமலையில் இருந்து மேள தாளம் முழங்க பெருமாள் எழுந்தருள உள்ளதாக கூறினார். அதேபோல் 20 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஏ.சி.சண்முகம் கூறும்போது, திருமலையில் உள்ள நிர்வாகிகள், தமிழகத்தில் உள்ள அறங்காவலர்கள் ஆகியோருக்கு இவ்விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | அக்னி நீராடிய கடலில் அமாவாசை நாளன்று நீராடுவோரின் பாவங்கள் தீரும்
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமண வைபத்திற்கு திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும் 100 வேத பண்டிதர்களும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும்
மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியான வாழ்வைத் தரும் பிரதோஷ வழிபாடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ