திருப்பதியில் அலைமோதும் கூட்டம்; தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2022, 10:49 AM IST
  • சுமார் 48 மணி நேரம் காத்திருப்பு
  • தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
  • பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரிப்பு
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்; தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு title=

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது. 

கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். 

மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்

அத்துடன் திருப்பதி வந்துள்ள பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 48 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே இறைவனை வழிபட முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது. மேலும் பகத்தார்கள் சிரமமின்றி தரிசிக்க தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் விஐபி பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி
* திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tirupatibalaji.ap.gov.in/#/login திறக்கவும்.
* இங்கு காத்திருக்க வேண்டிய நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.
* அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்.
* கேப்ட்சா குறியீட்டை பெற்றவுடன், அதை உள்ளிடவும்.
* இப்போது ஜெனெரேட் ஓடிபி என்பதை கொடுக்கவும்.
* உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க ஓடிபி ஐ உள்ளிட்டு லாகின் கொடுக்கவும்.
* இப்போது உங்கள் காலெண்டர் திறக்கும்.
* அதில் நீங்கள் விரும்பும் தேதிகளை தேர்ந்தெடுக்கவும்.
* அங்கு பச்சை நிறத்திற்கான வண்ணக் குறிப்பு கிடைக்கும். அது காலியாக இருக்கும் இடங்களை குறிக்கிறது.

முக்கிய குறிப்பு: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 டேஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையின் மூலம் கிடைக்கப்பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நேரில் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க | வேலூரில் இருந்து திருப்பதிக்கு இலவச பயணம்; பயன்பெறுவது எப்படி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News