சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ₹1000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடம்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 உடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைவருக்கும் ₹1000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. மேலும் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரே‌சன் அட்டைதாரர்களுக்கு ₹1000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைத்தாரர்கள் 10,11,330 பேருக்கு பரிசு தொகை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டத்து,. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முன்னதாகவே, இவர்களில் 4,12,558 குடும்ப அட்டைத்தாரர்கள் பொங்கல் பரிசான சென்று விட்டனர். இதனால், பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள், மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகினர். இவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசு தொகுப்பினை அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. 


இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ₹1000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.