ஈஷா யோக மையம் தொடர்பான மனுவை மார்ச் 27க்கு ஒத்திவைத்தது சென்னை நீதிமன்றம்!
Madras High court : மஹா சிவராத்திரி விழா நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த மனுதாரரின் நோக்கத்தை கேள்வி கேட்ட சென்னை உயர் நீதிமன்றம்...
சென்னை: கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய நிகழ்நிலை அறிக்கைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வரும் மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மஹா சிவராத்திரி விழா நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்குத் தொடர்ந்த அவர், இது குறித்து நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு இட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் படிக்க | 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ‘யோகமான சிவராத்திரி’! நற்கதி கிடைக்க செய்யும் யோகங்கள்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுதாரரின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கூறியது. மஹாசிவராத்திரி விழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்ததால் மனுதாரரின் நோக்கம் கேள்விக்குரியதாக உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையில், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தோர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் நேரலையாக ஒளிபரப்படுகிறது.
மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும்.
மேலும் படிக்க | ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி? லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ