300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ‘யோகமான சிவராத்திரி’! நற்கதி கிடைக்க செய்யும் யோகங்கள்!

Worship On Mahasivaratri Day : சிவராத்திரியன்று பூஜை செய்தவர்கள், சங்கல்பம் செய்தவர்கள், பூஜையை பார்த்தவர்கள் என அனைவருக்கும் நற்கதி கிடைக்கும் என்றால், 5 யோகங்கள் கூடி வரும் நாளில் என்ன நடக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 6, 2024, 04:13 PM IST
  • சிவராத்திரியன்று பூஜை செய்தவர்களுக்கு நன்மை
  • சிவராத்திரி சங்கல்பம் செய்தவர்களுக்கு புண்ணியம்
  • சிவராத்திரி பூஜையை பார்த்தவர்களுக்கு நற்கதி
300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ‘யோகமான சிவராத்திரி’! நற்கதி கிடைக்க செய்யும் யோகங்கள்! title=

300 வருடங்களுக்குப் பிறகு வரும் அபூர்வ மகா சிவராத்திரி! விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற பல நூல்களில் மகா சிவராத்திரி அன்று சிவனை தரிசிப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் முதல் அதன் புண்ணியம் என பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று பூஜை செய்தவர்கள், சங்கல்பம் செய்தவர்கள், பூஜையை பார்த்தவர்கள் என அனைவருக்கும் நற்கதி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன.

300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயமாக மகா சிவராத்திரி நாளன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது மிகவும் சிறப்பானது.

இந்த ஆண்டு மார்ச் 8ம் தேதியன்று வெள்ளிக்கிழமை நாளன்று வரும் மகா சிவராத்திரியன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் செய்வது சிறப்பு. சிவராத்திரியன்று சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள் என பக்தி பொங்க பக்தர்கள் சிவ ஆராதனை செய்வார்கள்.

அதிலும் ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் மிகவும் விசேஷமானது என்று ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!

சர்வார்த்த சித்தி யோகம் என்பது, நமது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் யோகம் ஆகும். இந்த யோக நாளில் ஈசனை வழிபட எண்ணியவை எளிதாக நிறைவேறும், காரியத்தடைகள் அனைத்தும் நீங்கும். 

அடுத்து சிவ யோகம் என்பது சிவனை தியானிக்கும் வேளை. இந்த விசேஷமான நாளில் செய்யப்படும் யோகங்கள், தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் என புண்ணியமும் பலனும் பலமடங்காக கிடைக்கும். 2024 மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை  இருக்கிறது.

அடுத்து திருவோண நட்சத்திரம் சிவராத்திரியன்று வருகிறது. சனி பகவானுக்கு உரிய நட்சத்திரத்தன்று, எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமானதாக இருக்கும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் சிவராத்திரியன்று வழிபட்டால், தொழில், வியாபாரம், பதவி உயர்வு என அனைத்தும் திருப்தியாக நடைபெறும். அதோடு ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கி விடும்.

மேலும் படிக்க | மாசி மாதம் சதுர்த்தி சங்கஷ்டி சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு

ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வது நல்லது. மகாசிவராத்திரியன்று நடைபெறும் சிவ யோக வேளையில் செய்யும் வழிபாடு மனதில் நிம்மதியையும் கொடுக்கும்.

சித்த யோகம் கூடி வரும் சிவராத்திரி நாளன்று, விநாயகப் பெருமானையும் இந்த நாளில் வணங்குவது நல்லது.இந்த மகா சிவராத்திரி தினத்தன்று விரதம் இருப்பது சொந்தங்களையும் நண்பர்களையும் சேர்த்து வைக்கும்.

மகா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சுக்கிர பிரதோஷ நாளன்று வரும் சிவராத்திரி நாளன்று சிவனை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும். கடன்சுமை குறையும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும்.

மேலும் படிக்க | 4 Kaala Poojai: மங்களம் தரும் மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜை நியமங்களும் பூஜை விதிகளும்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News