8 மாதங்களில் கட்டடம்- 4 ஆண்டுகளாக ஒற்றை செங்கல்: வைரலாகும் சு.வெங்கடேசனின் பதிவு
Su.Venkatesan MP: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் கட்டடமாக உயர்ந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் ஒற்றைச் செங்கலோடு நிற்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு கடன் வழங்கும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், தற்போது வரை நிதி ஒதுக்கவில்லை.
எனினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக நடைபெற்று வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தின் செலவு ரூ.1,264 கோடியாக தொடக்கத்தில் மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியின் தாமதம் குறித்து கேலி செய்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவுபடுத்த பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம், அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ், இரண்டும் மதுரையின் சாட்சிகள் எனப் பதிவிட்டு கலைஞர் நூலகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி இதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 8 மாடிக் கட்டடமாக உருவாகி வரும் இதன் பணிகள் ஏறக்குறைய 80% நிறைவடைந்துள்ளது.
மேலும் படிக்க | RBI: மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம், இஎம்ஐ எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR