RBI: மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம், இஎம்ஐ எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ

RBI Hikes Repo Rate:  சுமார் ஒரு மாத கால இடைவெளியில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் கார் கடன் இஎம்ஐகள் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2022, 12:52 PM IST
  • ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியது.
  • ரெப்போ விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் கார் கடன் இஎம்ஐகள் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
RBI: மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம், இஎம்ஐ எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ title=

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியது: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தார். இதன் பிறகு ரெப்போ விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

சுமார் ஒரு மாத கால இடைவெளியில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் கார் கடன் இஎம்ஐகள் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும்

ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி செய்துள்ள மாற்றம், வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. ரெப்போ விகிதம் அதிகரிப்பால், வரும் நாட்களில் உங்கள் வீட்டுக் கடன், கார் கடன் ஆகியவற்றின் இஎம்ஐ அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியின் பண மதிப்பாய்வு கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு, பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. புதன்கிழமை காலை பச்சை நிறத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை காலை 10.30 மணியளவில் 55 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. 

மேலும் படிக்க | ரெப்போ விகிதத்தை 0.50% உயர்த்தியது RBI; EMI சுமை அதிகரிக்கும் 

இதன் விளைவு என்னவாக இருக்கும்?

ரெப்போ விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவு உங்கள் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் பிற கடன்களில் தெரியும். நீங்கள் ஏற்கனவே கடன் பெற்றிருந்தாலோ அல்லது பெறும் எண்ணத்தில் இருந்தாலோ, வரும் நாட்களில் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பதால், இஎம்ஐ முன்பை விட அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். இது புதிய மற்றும் பழைய என அனைத்து வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். 

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

ஆண்டுக்கு 11 ஆயிரம் சுமை அதிகரிக்கும்

- ஒரு வாடிக்கையாளர் 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெற்றிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இதுவரை, அவரது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாக இருந்தால், இப்போது அது 7.70 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

- 30 லட்சம் கடனில், தற்போதைய வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.23,620 இஎம்ஐ செலுத்தி இருப்பார். 

- தற்போது வட்டி விகிதம் 0.50 சதவீதம் அதிகரித்தால், இந்த இஎம்ஐ ரூ.24,536 ஆக உயரும். 

- அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.916 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். 

- இதன்படி வாடிக்கையாளர் ஆண்டுக்கு கூடுதலாக சுமார் ரூ.10,992 செலுத்த வேண்டியிருக்கும்.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இது வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது உங்கள் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதமாகும்.

மேலும் படிக்க | HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: நீங்கள் செலுத்தும் EMI அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News