ரயில் பெட்டியில் தீ: லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாரத் கௌரவ் என்ற ஆன்மீகச் சுற்றுலா ரயிலில் இன்று (ஆகஸ்டு 26) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் இருந்த பக்தர்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் கேஸ் சிலிண்டர் எடுத்து செல்ல அனுமதி இல்லை. சுற்றுலா பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டரை எடுத்து சென்றது இந்த ரயில் விபத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் எதையெல்லாம் எடுத்து செல்ல கூடாது? ரயிலில் தீ பிடித்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் பெட்டியில் எடுத்து செல்லக்கூடாதவை:


இந்திய ரயில்வே துறை பயணிகள் பெட்டியில் எதையெல்லாம் எடுத்து செல்லக்கூடாது என சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதை பின்பற்றாததால் பல விபத்துக்கள் நிகழ்கின்றன. இனி ரயில் பயணங்களின் போது பின்வருபவற்றை எடுத்து செல்வதை தவிர்த்திடுங்கள். 


>ஆசிட் எடுத்து செல்லக்கூடாது: ரயிலில் பயணிகும் போது எந்த விதமான ஆசிட் (அமிலம்) பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. அவ்வாறு எடுத்து சென்றால் அதற்கு தண்டனையாக அபராதம் விதிக்க வேண்டி இருகும். பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அமிலம் எடுத்து செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.


>ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வோர் பலர் கேஸ் சிலிண்டர்களை ரயில் வழி பயணத்தின் போது எடுத்து செல்கின்ற்னார். இது சட்டப்படி குற்றமாகும். அது காலி சிலிண்டராக இருந்தாலும் ரயிலில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கிறாது கேஸ் சிலிண்டர். 


>சமைக்கப்படாத கோழிகளை ரயில் பயணத்தின் போது எடுத்து செல்ல அனுமதி இல்லை. இறந்த கோழிகளால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும். இதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் இறந்த கோழிகளை எடுத்து செல்ல தடை விதித்துள்ளது. 


>பட்டாசு அல்லது வெடி சம்மந்தமான பொருட்களை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது. பயணிகலின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பட்டாசுகளுக்கு ரயிலில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு பிடிப்பட்டால் அல்லது பட்டாசு ரயிலிற்குள் வெடித்தால் அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 


மேலும் படிக்க | அதிமுக வழக்கு: இன்னும் அசல் வழக்கு நிலுவையில் தான் இருக்கு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்


தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 


பயணிகள் ரயிலில் இருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்...? விரிவான விவரம். 


>தீ விபத்து ஏற்பட்ட உடன் அலாரம் அடிக்கும் செயினை இழுத்து ரயிலை நிறுத்த வேண்டும். 


>தீ அதிகமாக பரவுவதற்கு முன்பு அதை அணைக்க முயற்சி செய்ய வேண்டும். போர்வை அல்லது தண்ணீரை வைத்து தீயை அணைக்க வேண்டும். 


>பலருக்கு தீயினால் ஏற்பட்ட புகையினால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதை தடுக்க, ஈரமான துனியை மூக்கின் அருகே வைக்க வேண்டும், 


>ஒரு பெட்டியில் தீ பற்றி விட்டால் அடுத்த பெட்டிக்கு உடனடியாக செல்ல வேண்டும். 


>பயணிகள் முதலில் பெட்டிகளை தூக்குவதை விட்டுவிட்டு அவரவர் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதனால் தீ விபத்தின் போது முதலில் தப்பிக்கும் வழியை மட்டும் பார்க்க வேண்டும். 


>தீ ஏற்பட்டால் எழுந்து நிற்காமல் தரையோடு தரையாக படுக்க வேண்டும். 


>ரயில் நின்றவுடன் பயணிகள் பெட்டிகளில் இருந்து உடனடியாக இறங்க வேண்டும், 


>தீ விபத்தால் யாருக்காவது அடிப்பட்டிருந்தால் அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும். 


>கேஸினால் தீ விபத்து ஏற்பட்டால் தீ பிடித்த கேஸை முதலில் ரயில் பெட்டியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 


>நுரை போன்ற தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கலாம். சோடா, தண்ணீர் பைப்பில் இருந்து அதிகளிவிலான தண்ணீர் உபயோகப்படும். 


மேலும் படிக்க மதுரை கோர காட்சிகள்: ரயில் பெட்டிகளில் தீ விபத்து - 8 பயணிகள் பலி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ