மதுரை ரயில் தீ விபத்து: 9 பயணிகள் பலி... நடந்தது என்ன?

Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 26, 2023, 08:35 AM IST
  • தீ பற்றிய ரயில் பாரத் கௌரவ் என்றழைக்கப்படும் யாத்திரைப் பயணிகள் ரயிலாகும்.
  • அந்த ரயிலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
  • கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை ரயில் தீ விபத்து: 9 பயணிகள் பலி... நடந்தது என்ன? title=

Madurai Train Fire Accident: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாரத் கௌரவ் என்ற ஆன்மீகச் சுற்றுலா ரயிலில் இன்று (ஆக. 26) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் இருந்த பக்தர்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60-க்கும் மேற்பட்ட பயணிகள்

ஒரு பெட்டியில் பிடித்த தீ அடுத்தடுத்த பெட்டிகளில் பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலில் இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டத்தை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும், சில பயணிகள் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உத்தர பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பயணிகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 பேர் காயம்

முதலாவதாக, இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 7 பேர் பெட்டியில் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 20 படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டிருக்கின்ற நிலையில் மற்ற உடல்களை உடன் வந்த உறவினர்கள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க| Indian Railways: இதற்கெல்லாம் ரயிலில் அனுமதி இல்லை.. மீறினால் தண்டனை!! 

அதிகாலையில் தீ விபத்து

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி அந்த ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் நேற்று (ஆக. 25) நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். மேலும், ரயில் நிலையத்தின் மைய பகுதியில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை தொடக்கம்

மதுரை போடி லைன் பகுதியில் ரயில்வே பெட்டியில் தீ விபத்து தீயணைப்புத் துறை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீ பற்றிக்கொண்ட ரயில் பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் தனித்துவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீ மற்ற ரயில்களில் பற்றிவிடாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா, காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்த வருகின்றனர்.

ரயில்வே விதிகளின்படி, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது. குறிப்பாக, தீப்பெட்டி, பட்டாசுகள் போன்றவைக்கே அனுமதி இல்லாத நிலையில், பயணிகள் எப்படி சிலிண்டரை பயணத்தின் போது எடுத்து வந்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சரியான சோதனைகள் இல்லாதது இதுபோன்ற கோர சம்பவங்களுக்கு காரணங்களாக அமைவதாக கூறப்படுகிறது. மேலும், ரயிலில் புகைப்பிடிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் போட போறீங்களா... இந்த விஷயத்தில் சிக்கினால் பேங்க் பேலன்ஸ் காலி ஆகிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News