பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28,29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.  போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரூ.48,000 கோடி நஷ்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்..!


இது குறித்து மதுரை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதாகவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயல் எனவும் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு வேலை நிறுத்தங்கள் இடையூறை ஏற்படுத்தும் என்பதால், மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது என மதுரை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. 



அன்றைய தேதிகளில் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், பணிக்கு வருகை தரவில்லை எனில் 'ஆப்செண்ட்' மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வருகை தராமல் இருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் படிக்க | பிற மாநில பேருந்து கட்டணத்தை காட்டிலும் தமிழக பேருந்துகளில் கட்டணம் குறைவு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR