Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி

Old Pension Scheme: பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த சர்ச்சை உள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 17, 2022, 11:21 AM IST
  • மத்திய அரசிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை.
  • இந்நாட்களில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது.
  • ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஓபிஎஸ் அமலுக்கு வந்துள்ளது.
Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி title=

கடந்த சில வாரங்களாக பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய விவாதம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச தேர்தல்களின் போதும் இது ஒரு முக்கிய விஷயமாக பேசப்பட்டது. உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இது குறித்த சர்ச்சை உள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் போன்ற நாட்டின் பல மாநிலங்களில் ஓபிஎஸ் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத்தை (ஓபிஎஸ்) திரும்ப வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின
ஓபிஎஸ் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்வியை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி எழுப்பியிருந்தார். மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மத்திய ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்கப் போகிறதா? மத்திய அரசு அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தால், இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அந்த எண்ணம் அரசுக்கு இல்லை என்றால், அதற்கு என்ன காரணம்? என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டம்: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், அறிவிப்பை வெளியிட்டது அரசு 

ஓபிஎஸ்-ஐ அமல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்கவில்லை

இதற்கு நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் காரத் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டது. பிப்ரவரி 23ஆம் தேதி பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் தெளிவுபடுத்தினார். ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியை தொடங்கியவர்களுக்கு இந்த அமைப்பு செயல்படுத்தப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு இப்போது எந்த எண்ணமும் இல்லை என்று அவர் கூறினார். 

பழைய ஓய்வூதியத்தை வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது

குறிப்பிடத்தக்க வகையில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ அரசாங்கம் 2003 இல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அதிகாரத்தில் இருந்து வாக்களிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 1 ஏப்ரல் 2004 அன்று ஏற்கனவே உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அறிமுகப்படுத்தியது. இந்நாட்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மாநில அளவுகளில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் ஒரே எண்ணத்தில் ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர். 2010க்கு பிறகு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை நியமித்தது. இந்த திட்டத்தில், பழைய திட்டத்தை விட ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சலுகைகளே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News