மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்ட கோவையில் பிடிபட்ட மக்னா யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை வெள்ளியங்காடு சாலையில் கொண்டு வந்தனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முரண்டு பிடிக்கும் மக்னா யானை


யானையை காரமடை அருகே உள்ள முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் யானையை லாரியில் கொண்டுவந்த தகவல் அறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் லாரியை சிறைப்பிடித்து யானையை திருப்பி எடுத்து செல்ல வலியுறுத்தினர்


யானையை வனத்தில் விட மக்கள் எதிர்ப்பு


யானையை இங்கு விட்டால் மீண்டும் ஊருக்குள் புகும் எனவே இந்த யானையை இங்கு விடக்கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர். 


மேலும் படிக்க | வாக்காளர்களை அடைத்து வைக்க சட்டவிரோத கொட்டகைகள்! அதிரும் ஈரோடு இடைத்தேர்தல்


திருப்பி அனுப்பப்பட்ட மக்னா யானை


இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி யானையை போலீஸ் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொன்டு செல்லபட்டது.


மக்னா யானைக்கு மீண்டும் மயக்க ஊசி


தற்போது யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தபட்டது யானை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை அரசு மரக்கிடங்கில் லாரியுடன் நிறுத்திவைக்கபட்டுள்ளது. யானையை எங்கு கொண்டு சென்று விடுவது என இதுவரை உயர் அதிகாரிகள் முடிவுக்கு எடுக்காததால் வனத்துறையினர் தின்னி வருகின்றனர்


மேலும் படிக்க | தேனி: கேண்டீனில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் புலி..! சிசிடிவி காட்சிகள்


இதற்கு முன்னதாக, கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சுள்ளிகொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது.


கடந்த ஒரு மாதமாக ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, சின்னார்பதி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடமாடி வந்ததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.


பகல் நேரங்களில் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உலா வந்து சாலையின் குறுக்கே நின்று கொள்வதனால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனத்தில் சுழற்சி முறையில் சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு, இறுதியில் யானை பிடிபட்டது. கோவை வட்டாரத்தில், யானைகள் நாட்டிற்குள் வருவதால் அவ்வப்போது பரபரப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.


மேலும் படிக்க | குளம் மற்றும் கிணற்றை காணவில்லை! வித்தியாசமான முறையில் போராட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ