தேனி: கேண்டீனில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் சிறுத்தை..! சிசிடிவி காட்சிகள்

மேகமலை மணலாறு கேண்டீன் பகுதியில் சிறுத்தை படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 16, 2023, 05:11 PM IST
தேனி: கேண்டீனில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் சிறுத்தை..! சிசிடிவி காட்சிகள்  title=

தேனி மாவட்டம் மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் உள்ளது. அங்கு மணலாறு  இருந்து மகாராஜாமெட்டு செல்லும் வழியில் கேன்டீன்  ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். மேலும், அப்பகுதி மக்களிடமும் விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | சிட்டிசன் திரைப்பட பாணியில் தவிக்கும் நவீன அத்திப்பட்டி! கண்மாயை காணவில்லை 

இந்நிலையில், மகாராஜாமெட்டு செல்லும் வழியில் உள்ள கேன்டீன் பகுதியில் சிறுத்தை  நடமாட்டம் மீண்டும் உறுதி  செய்யப்பட்டுள்ளது. மணலாறு குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்கிறது. அந்த கேமராவில் சிறுத்தை ஒன்று சாதாரணமாக நடந்து செல்கிறது. இதேபோல் கேண்டீனில் இருக்கும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று அங்கு சர்வ சாதாரணமாக நடமாடுவது தெரியவந்துள்ளது. அதிகாலை மூன்றரை மணியளவில் சுற்றும் புலி சில நிமிடங்கள் அங்கேயே படுத்து இளைப்பாறுகிறது. 

பின்னர் கேன்டீன் சுவர் ஓரமாக சென்று மலையேறுகிறது. இந்த காட்சிகள் இப்போது பொதுமக்களின் எச்சரிக்கைக்காக வனத்துறை வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நள்ளிரவு நேரங்களில் வெளியே உலாவும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் உலாவும் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க | குளம் மற்றும் கிணற்றை காணவில்லை! வித்தியாசமான முறையில் போராட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News