மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் மீட்பு - நடந்தது என்ன ?
நடிகை மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவரை போலீஸார் மீட்டனர்.
தமிழ் திரை உலகில் ’மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். ஒரு சில ஆண்டுகளிலேயே பிரபலமான நடிகையாக மாறிய மும்தாஜ், தொடர்ந்து குணச்சத்திர நடிகையாகவும் வலம்வந்தார். தற்போது, அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள 'எச்' பிளாக் பகுதியில் வசித்து வரும் மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் மும்தாஜின் வீட்டில் முஜிதின் என்ற ஒரு வடமாநில பெண் ஒருவர், கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது 'குற்றப் பரம்பரை' பஞ்சாயத்து... இயக்குநர் யார் தெரியுமா?
கடந்த சில தினங்களாக அந்தக் குடியிருப்பு வாசிகளை அழைத்து ‘என்னைக் காப்பாற்றுங்கள்’, ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அங்கிருப்பவர்களை அழைத்து அவர்களின் செல்போனை வாங்கி, போலீஸாருக்கு அழைத்து, ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறி இருக்கிறார். இவரின் தொல்லை தாங்க முடியாத அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் அண்ணா நகரில் இருக்கும் மும்தாஜின் வீட்டிற்கு போலீஸார் விரைந்தனர். அங்குள்ள முஜிதின் என்ற அந்தப் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் பணிப்பெண் முஜிதின் கூறியதாவது, “நான் வட மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக மும்தாஜ் வீட்டில் வேலை செய்கிறேன். தற்போது சில தினங்களாக அவர் எங்களுக்கு அதிக வேலை கொடுக்கிறார். மேலும் டிவியும் பார்க்க விடுவதில்லை. எங்களைக் கொடுமை செய்கிறார். அதனால் தயவு செய்து என்னையும், என் தங்கையையும் எங்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
மேலும் படிக்க | குட் நியூஸ் சொன்ன நமீதா; நிறைமாத கர்ப்பத்துடன் போஸ்
இதையடுத்து முஜிதினின் தங்கையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ‘எனக்கு இங்கு இருக்கவே பிடித்திருக்கிறது. அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். அக்காவை மட்டும் என் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து, வட மாநிலத்தில் உள்ள இவர்களின் பெற்றோரிடம் தகவல் அளித்த போலீஸார், உடனடியாக வந்து அக்கா முஜிதினை ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீஸார் நடிகை மும்தாஜிடமும் விசாரணை நடத்தினர். அதில் மும்தாஜ் கூறியதாவது, ‘அக்கா - தங்கை இருவரும் ஆறு வருடங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். தற்போது அக்கா, தங்கை இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்வதில்லை. இவர்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, வேறு எதுவும் பெரிய காரணங்கள் இல்லை.’ என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | வைரலாகும் விஜய்யின் லுக்... இதுதான் கெட்டப்பா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR