நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று அவர்களது குறைகளை கேட்டறியும் மக்களுடனான பயணத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு வருகின்றார்.


இந்த பயணத்தில் முன்னதாக ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை அடுத்து தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கின்றார். மக்கள் நீதி மய்யம் அறிவிப்பின் படி வரும் நவம்பர் 9, 10-ஆம் தேதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 



நவம்பர் 9-ஆம் தேதி நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி. பாலக்கோடு, கரிமங்கலம். தர்மபுரி மற்றும் 10-ஆம் தேதி அரூர், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராய்கோட்டை, ஒசூர் ஆகிய ஊர்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் தன் கட்சியினருடன் கலந்துரையாடுகிறார்.