தங்கச் சங்கிலிக்காக ‘நண்பனின் தாயை’ இரும்பு ராடால் அடித்து கொல்ல முயன்றவர் கைது..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி திருடியவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 60வயதான மூதாட்டி மலர். பிள்ளைகளுக்கு திருமணம் செய்துகொடுத்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த கதவுகள் திறந்து கிடந்தது. மூதாட்டியை காணவில்லை என்று வீட்டிற்குள் நுழைந்து பார்த்த அக்கம்பக்கத்தில் வசிப்பவர் மிரண்டு போயிருக்கிறார். தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் மூதாட்டி பேச்சு மூச்சில்லாமல் கிடந்திருக்கிறார். உயிருக்குப் போராடிய நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தவறி விழுந்து அடிபட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் கிடந்த இரும்பு கம்பி எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தது. கம்பியில் ரத்தம் படிந்து கிடந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்திருந்தார்கள். வீட்டில் கிடைத்த தடயங்களை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். மூதாட்டி மலர் வீட்டில் பார்த்ததாக வினோத் என்பவரை அக்கம்பக்கத்தினர் கைகாட்டியிருக்கிறார்கள். அவரை பிடித்து விசாரிக்க அடுத்தடுத்த மர்ம முடிச்சுகள் அழிக்கப்பட்டது.
மேலும் படிக்க | வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு
35 வயதான வினோத் மூதாட்டியின் மகன் செந்தில்குமாரின் நண்பர். நகைக்காக நண்பனின் தாயை கொலை செய்யத் துணிந்திருக்கிறார், வினோத். ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்தவர் மூதாட்டியின் தலையில் பலமாக அடித்து நிலைதடுமாற வைத்திருக்கிறார். மயங்கியதும் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இந்நிலையில் வினோத்தை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். நகைக்காக நண்பனின் தாயையே கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR