நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கொலை செய்யப்பட்டு கிணற்றில் நிர்வாண நிலையில் பெண் சடலமாக மீட்ட விவகாரத்தில் சொத்து தகராறில் உறவினரே கொன்று வீசியது அம்பலமானது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 11, 2022, 10:10 PM IST
  • கிணற்றில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண் சடலம்
  • சொத்து தகராறில் உறவினரே கொன்றது வீசியது அம்பலம்
  • போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..! title=

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன்(42). இவருக்கு விஜயா (37) என்ற முதல் மனைவியும் செல்வராணி(35) என்ற இரண்டாவது மணியும் உள்ளனர். மேலும், 15 வயதில் அஜித் என்ற ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 11 ஆம் தேதி குடும்பத்தகராறு ஏற்பட்டு வீட்டிலிருந்து சென்ற செல்வராணி, திடீரென்று காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது மறுநாள் காலை, சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்ட கிணற்றில் கைகால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இறந்துகிடந்தார், செல்வராணி

selvarani murder

தகவலறிந்த விரகனூர் போலீசார் சந்தேக வழக்கு பதிவு செய்து அக்கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அசோகனின் தங்கை ராசாத்தியின் கணவரான விவசாயி சிவராஜ் பகடப்பாடி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்திருக்கிறார். ஆம், செல்வராணியை கொலை செய்து கிணற்றில் வீசியது சிவராஜ்தான். வழக்கில் உள்ள சந்தேகங்களை உடைத்து கிட்டத்தட்டக் குற்றவாளியை நெருங்கும் சமயத்தில் சிவராஜ் தாமாக வந்து சரணடைந்தார். அவரை கைது செய்த முத்தையன் வீரகனூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு பூர்வீக சொத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை அசோகன் தனது முதல் மனைவி விஜயாவுக்கு எழுதி வைத்துள்ளார். 

selvarani murder

மீதிமிருந்த 5 ஏக்கர் நிலத்தை இரண்டாவது மனைவி செல்வராணிக்கு எழுதி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த சிவராஜ், மச்சானிடம் மனைவிக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துகொடுக்க சொல்லியிருக்கிறார். மனைவி ராசாத்தியையும் அவரது அண்ணனிடம் சொத்தில் பங்கு கேக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அது தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நகர அதில், சிவராஜுக்கும் அவரது மச்சானின் இரண்டாவது மனைவி செல்வராணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் செல்வராணியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். பதறிப்போனவர், போலீசில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தனது கிரிமினல் புத்தியை அங்கு காட்டியிருக்கிறார். 

மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த மகேஸ்வரி கைது..!

செல்வராணியின் சேலையை அவிழ்த்து கைகளை கட்டப்பட்டு கல்லை கட்டி கிணற்றில் நிர்வாண நிலையில் வீசினார். யாரோ அவரை கற்பழித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசி சென்றுவிட்டதாக வழக்கை திசை திருப்பிவிட நினைத்து கச்சிதமாக அதை செய்து முடித்தார். இந்நிலையில்தான், போலீசார் தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தவர்,தாமாகவே போலீசில் சரணடைந்தார். இதனையடுத்து சிவராஜை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ‘ஆத்திரம் ஒருவரை அழிவுக்கு கொண்டு போகும்’ என்பது சிவராஜ் வாழ்க்கையில் தற்போது உறுதியானது. 

 

மேலும் படிக்க | காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News