கடந்த 4ம் தேதி கோவை சர்வதேச விமான நிலையத்தில் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் வருண் அரோரா (33). இவர் பகல் 2.50 மணியளவில் கோவையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்ய கோவை விமான நிலையம் வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டனர். அப்போது அவரது பையில் இருந்த பார்சலில் வெடி மருந்து போன்ற பொருள் இருந்தது தெரிய வந்தததையடுத்து உடனே அருண் அரோராவை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தான் 2 கிலோ தங்க மண், இரிடியம் கலந்த பொருளை ஒருவரிடம் வாங்கியதாகவும், அதை பரிசோதிக்கக் கொச்சிக்கு வந்ததாகவும், கொச்சியில் உறுதி செய்யப்படாததால் கோவை பெரியகடை வீதியில் பரிசோதித்தேன் எனவும் அவர் கூறினார். 


ALSO READ காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்


பின்னர் கோவையிலிருந்து டெல்லி புறப்பட முயன்றதாகவும், சதி செய்யும் நோக்கத்தில் எதையும் கொண்டு செல்லவில்லை என்று வருண் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லி தொழில் அதிபரிடம் 10 கிராம் அளவில் வெடிமருந்தும் மற்றவை உலோக துகள்கள் என்பதால் தொடர்ந்து அது துப்பாக்கி பவுடர் என்ற அடிப்படையில் பயணி அருண் வரோராவை பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இந்த நிலையில் இன்று காலை அருண் வரோரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது வெடிமருந்து மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடி மருந்து பொருளை போலீசார் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.


ALSO READ கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR