சோதனை மேல் சோதனை - அதிமுக அலுவலகத்துக்குள் சென்ற இபிஎஸ் தரப்புக்கு அடுத்த அதிர்ச்சி
அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சென்ற இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல அறைகள் சூறையாடப்பட்டிருந்தன.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்ட தினத்தன்று அவரது தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் பெரும் மோதல் எழுந்தது. அந்தச் சூழலில் ஆவேசத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்த ஓபிஎஸ் தரப்பினர் அங்கிருக்கும் பொருள்களை சூறையாடினர். மேலும் கணினி, ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்டவைகளையும் கையோடு எடுத்துச் சென்றனர். நிலைமை கைமீறி போனதையடுத்து வருவாய்த் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இது அக்கட்சியின் வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி சதீஷ்குமார் நேற்று வழங்கினார். அதில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி.
மேலும் ஒரு மாதத்துக்கு தொண்டர்கள் யாரையும் அதிமுக அலுவலகத்துக்கு அனுமதிக்கக்கூடாது, காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைத்தார். அதன் தொடர்ச்சியாக கட்சி அலுவலகத்திற்க்குள் இபிஎஸ் தரப்பினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக, தரை தளத்தில் இருக்கக்கூடிய துணை பொதுச்செயலாளருக்கான அறை, கொள்கை பரப்பு செயலாளருக்கான அறை, அவைத்தலைவருக்கான அறை முழுவதும் சூறையாடப்பட்டிருந்தன.
மேலும் படிக்க | தப்பா பேசுன செருப்பு பிஞ்சிடும் - பயில்வான் ரங்கநாதனை பீச்சில் பஞ்சராக்கிய நடிகை
அதேபோல், அறையின் கதவு, ஜன்னல்,நாற்காலி என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும், முதல் தளத்தில் இருக்கக்கூடிய கணிணி அறை முழுவதும் சூறையாடப்பட்டு அலுவலகம் முழுவதும் உடைந்த பொருட்களாகவே காட்சி அளித்தன.
அதுமட்டுமின்றி, இரண்டாவது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருள்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் காணவில்லை எனவும் கடந்த 11ஆம் தேதி நடந்த கலவரத்தின்போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவு பரிசுகள் மாயமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | போலீஸ் கஸ்டடியில் இருந்த குற்றவாளி தப்பி ஓட்டம் விடிய விடிய போலீஸ் தேடுதல் வேட்டை
காணாமல் போன பொருள்கள் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை.எனவே இது தொடர்பாக காவல் துறையில் புகாரளிக்க இபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ