சென்னை: உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை மெரீனா கடற்கரை (Marina Beach) ஆகும். 13 கி. மீ. நீளம் கொண்ட மிகவும் பிரபலமான பீச் மெரீனா. சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்யும் மெரீனா பீச் லாக்டவுனுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு, லாக்டவுன் விதிக்கப்பட்ட பிறகு மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடற்கரை காற்று வாங்கவும் தடா இருந்த நிலையில், தற்போது மக்கள் வழக்கம்போல காற்று வாங்க கடற்கரைக்கு வருகிறார்கள். கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு அதாவது எட்டு மாதகால இடைவெளிக்குப் பிறகு, சென்னை மெரீனா கடற்கரையை (Marina Beach) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.


பொது மக்களுக்காக 8 மாதங்களுக்குப் பிறகு மெரீனா திறக்கப்பட்ட போதிலும், சமூகத் தொலைவையும் பாதுகாப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது


2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு (Jallikattu) ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அனைவராலும் நீண்ட கடற்கரை என்று அறியப்பட்ட மெரீனா பீச், போராட்டத்தின் ஒரு சின்னமாகவும் அறியப்படத் தொடங்கியது அப்போதுதான். 


Also Read | டிசம்பர் 31 வரை 34 ரயில்கள் ரத்து! Indian Railways அதிரடி உத்தரவு!


இன்று முதல் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய அனுமதி கிடைத்ததால், மக்கள் கடற்கரைக்கு பெருமளவில் வந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுகளை அடுத்து சென்னை மாநகராட்சி, கடற்கரையைச் சுற்றி குப்பைத் தொட்டிகளை அமைத்தல், சுகாதாரப் பணியாளர்களை நிறுத்துதல், பொது கழிப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 


பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மெரீனா பீச் சிங்கார சென்னையின் (Chennai) எழில்மிகு இடமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மெரீனா கடற்கரை (Marina Beach) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால் கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கடைகளும், நடைபாதை வியாபாரிகளும் தங்கள் வாழ்வாதாரத்திற்கான பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கையுடன் உற்சாகமாக பொருட்களை கடைவிரித்துவிட்டனர்.  ஆனால் வழக்கம் போல் கூட்டம் வருவதற்கு இன்னும் சற்று நாட்கள் ஆகலாம். எதிர்வரும் புத்தாண்டு (New Year) இனிய ஆண்டாக இருக்கட்டும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR