ஒரு விஷயத்தை பிரபலப்படுத்துவற்காக அல்லது விளம்பரப்படுத்துவற்காக சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த காலம் முதல் தற்போது வரை போஸ்டர் ஒட்டும் பழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில சமயங்களில் சஸ்பென்ஸ் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்படுவதும் வழக்கம். சமீபத்தில் கூட நீங்க ரோடு ராஜாவா என்ற பெயரில் தமிழக காவல்துறை தரப்பில் போஸ்டர்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு இருந்தன. பிறகு தான் சாலை விதிகளை மீற கூடாது என்ற விழிப்புணர்வுக்கான விளம்பரம் என்பது தெரிய வந்தது. 


அதே போல் தற்போது தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. எதுக்குடா இந்த போஸ்டர் என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது. கூடவே இந்த போஸ்டரில் QR கோட் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்க அதை ஸ்கேன் செய்து உள்நுழைந்தால் ஸ்கேன் செய்தமைக்கு நன்றி. மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, தி பாஸ். வயது 45 எனவும் பெண்ணின் பெயர் ஸ்ரீதேவி, வயது 36 எனவும் மணப்பெண் மற்றும் மணமகனின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்


மேலும் மாப்பிளைக்கான தேடல் தொடர்கிறது, மணப்பெண்ணுக்கான தேடல் தொடர்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணமாகாத 90'ஸ் கிட்ஸ் இடையே யார்ரா இவன்? நம்மளையே மிஞ்சிட்டானே.. யார் அந்த மணமகன்? யார் மணப்பெண் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டருக்கான காரணமும் பலரின் மனதில் எழுந்துள்ள கேள்விக்கான பதிலும் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ