சென்னை: தமிழகம் முழுவதும் தடுப்பூசி செயல்முறை முழு முனைப்புடன் செயலில் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க, தமிழக அரசு முழு அளவில் தடுப்பூசி செயல்முறையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் கூடுதலாக 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படும். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


முன்னதாக, இந்த மாதத்திற்கு 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை தமிழ்நாட்டுக்கு (Tamil Nadu) ஒதுக்குவதாக மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மெகா தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி, தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


ALSO READ: சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்


செப்டம்பர் 12ஆம் தேதி மட்டும் 10,000 தடுப்பூசி (Vaccination) முகாம்களை நடத்தி 2,00,000 தடுப்பூசி டோஸ்களை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 



இதற்கிடையில், கொரோனா வைரஸின் (Coronavirus) மூன்றாவது அலை  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் தாக்கக் கூடும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியா தனது மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 15,000 டன்னாக உயர்த்த உத்தேசித்துள்ளது என்று ஆக்ஸிஜன் உற்பத்தி துறையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து,  அதிகபட்ச ஒரு நாள் தேவை அளவான 10,000 டன்கள் என்ற அளவில் இருந்து, 50 சதவிகிதம் கூடுதலாக இரு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ: கொரோனா 3வது அலைக்கு இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR