கொரோனா 3வது அலைக்கு இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது?

கொரோனா மூன்றாவது அலை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் நாட்டைத் தாக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஒரு நிபுணர் குழு, கடந்த மாதம் கணித்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 7, 2021, 10:56 AM IST
கொரோனா 3வது அலைக்கு இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது? title=

புதுடெல்லி: கொரோனா வைரஸின் மூன்றாவது அலை  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் தாக்கக் கூடும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியா தனது மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 15,000 டன்னாக உயர்த்த உத்தேசித்துள்ளது என்று ஆக்ஸிஜன் உற்பத்தி துறையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து,  அதிகபட்ச ஒரு நாள் தேவை அளவான 10,000 டன்கள் என்ற அளவில் இருந்து, 50 சதவிகிதம் கூடுதலாக இரு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய லிண்டே  நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைவர் மோலோய் பானர்ஜி, மத்திய அரசு ஒரு நாளைக்கு 15,000 டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை இலக்காகக் நிர்ணயித்துள்ள நிலையில், ​​லிண்டே மற்றும் பிற ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 13,500 டன் உற்பத்தியை திறனை அடையலாம் என்று நம்புவதாக கூறியுள்ளார். இரண்டாது அலையின் போது ஆக்ஸிஜன் தேவை உச்சத்தில் இருந்த சமயத்தில், மொத்த ஆக்ஸிஜன் தேவையின் மூன்றில் ஒரு பகுதியை லிண்டே இந்தியா வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கோழிக்கோட்டில் நிபா வைரஸால் சிறுவன் மரணம், கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு..!!!

கடந்த மாத தொடக்கத்தில், டெல்லி அரசு, புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகளை அமைப்பதன் மூலமோ, தற்போதுள்ள யூனிட்களின் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதன் மூலமோ ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தது.

கொரோனா மூன்றாவது அலை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் நாட்டைத் தாக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஒரு நிபுணர் குழு, கடந்த மாதம் கணித்திருந்தது.

மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கலாம் என கூறப்படும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management - NIDM) அமைத்த நிபுணர் குழு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் போன்ற உபகரணங்கள், ஆகியவை தேவையான அளவில் இல்லாமல், சிகிச்சை அளிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால், தொற்று பாதிப்பினால், பெரியவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை போலவே குழந்தைகளுக்கும் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், பிரதமர் அலுவலகத்தில் (PMO) சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சுமார் 7.6 சதவிகிதம் (10.4 கோடி) பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்படுவதாகவும், தற்போதைய தடுப்பூசி போடப்படும் வேகம் அதிகரிக்கப்படாவிட்டால், இந்தியா நாள் ஒன்றுக்கு ஆறு லட்சம் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

ALSO READ: Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News