செவிலியர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 'செவிலியர்களுக்கான சமூகவியல்' என்ற புத்தகம் சேர்க்கப்பட்டது. இந்த புத்தகத்தை டி.கே.இந்திராணி என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வரதட்சணையினால் ஏற்படும் நன்மைகள் எனக்கூறி பின்வரும் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடும்பங்களை கட்டமைப்பதில் வரதட்சணை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன, இந்தியாவில் வீட்டு உபயோகப்பொருட்களை பெற்றோர் வரதட்சணையாக வழங்கப்படுகின்றன. பெற்றோரின் சொத்தில் இருந்து ஒரு பங்கினை பெண்கள் வரதட்சணையாக பெற முடியும்.  வரதட்சணையால் பெண்கள் கல்வி கற்பது அதிகரிக்கிறது. படித்த, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமாக அளிக்கத் தேவை இல்லை என்பதால் பெற்றோர் பெண்களை படிக்க வைக்கின்றனர். இதன் மூலம் வரதட்சணை மறைமுகமாக பெண்கல்வியை ஊக்குவிக்கிறது. அழகு இல்லாத பெண்களுக்கு வரதட்சணை தருவதன் மூலமே திருமணம் நடைபெறுகிறது ஆகிய கருத்துகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த கருத்துகள் பிற்போக்குத்தனமாகவும், பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்த புத்தகத்தை செவிலியர் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 


 மேலும் படிக்க | மீண்டும் ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையில் பிற்போக்குத்தனமான பல கருத்துகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளதாகவும், பெண்களை பண்டமாகப் பார்க்கும் இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 



வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்