வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் ஒட்டிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. அந்தப் பகுதிகள் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள், வடமாவட்டங்கள் என பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி, குளங்களும் நிரம்பிவருகின்றன. சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்லது.
இந்தச் சூழலில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியிருக்கிறது. அதாவது தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகருமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது குறைந்த காற்றழுத்த பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து நகர்ந்து 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதிவாக்கில் தமிழ்நாடு, புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைதான் - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
அதேசமயம் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், கரையை கடந்த பிறகு அரபிக்கடல் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிவரை மழை இருக்குமென்று கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடனும், தேவையின்றி வெளியில் செல்லாமல் பாதுகாப்புடனும் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?... முழு விவரம்
மேலும் படிக்க | நாட்டின் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்: ஓம் பிர்லா
மேலும் படிக்க | முதலில் இபிஎஸ், அடுத்தது ஓபிஎஸ் - பிரதமரின் திட்டம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ