கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?... முழு விவரம்

கனமழை பெய்துவருவதால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 11, 2022, 07:53 AM IST
  • தமிழ்நாட்டில் மழை பெய்துவருகிறது
  • நேற்று இரவிலிருந்து தொடர்ந்து மழை
  • இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?... முழு விவரம் title=

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழையும் பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.

அதேபோல் தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | நாட்டின் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க‌ இளைஞர்கள் முன் வர‌வேண்டும்: ஓம் பிர்லா

அதன்படி நேற்று நள்ளிரவிலிருந்து மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை மழை விடிய விடிய பெய்துவருகிறது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்துவருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் தமிழ்நாட்டில் இன்று, சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை,வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர் (8ஆம் வகுப்புவரை), நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி,  ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.  அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் என கருதப்படுவதால் தமிழ்நாட்டில் மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | திமுகவின் தவறுகளை ஆளுநர் கண்டுபிடித்துவிடுகிறார் - வானதி சீனிவாசன்

மேலும் படிக்க | அமைச்சரோடு துபாய்க்கு சுற்றுலா - உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News