சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெரினா கடற்கரையோரம் காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. 


சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவு வளைவு அழகிய கலை நயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 66 அடி அகலமும், 52 அடி உயரமும் கொண்டதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா-வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டினார். 


இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.