MGR: இதய தெய்வமாக சரித்திரம் படைத்து கொடுத்துச் சிவந்த கரங்கள்
MGR: இதய தெய்வமாக புகழ் பெற்று தமிழகத்தை என்றுமே ஆளவந்தான் என்று பெயர் பெற்று சரிதிரம் படைத்து, கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்த பொன்மனச் செம்மல்...
புதுடெல்லி: தமிழகத்தின் அடையாளமாக இருந்த எம்.ஜி.ஆர் என்ற மாமனிதனின் நினைவுநாள் இன்று. 1987 டிசம்பர் 24ஆம் தேதியன்று அவர் இறந்த நாள், தமிழகத்தின் கருப்பு நாளாக மாறியது. அடுத்த நாள் கிறிஸ்துமஸ் தினம், தேவதூதனை போற்றும் நாள் என்று கொண்டாட்டத்தில் இருந்த மக்களுக்கு துக்க தினமாக மாறிய நாள். அப்படி என்ன செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்?
கறுப்பு எம்.ஜி.ஆர், `எம்.ஜி.ஆரின் நீட்சி நான்' என அரசியலில் ஈடுபடும் பலரும் அரசியலின் பிதாமகனாக நினைப்பது எம்.ஜி.ஆர் (MGR) என்று அனைவராலும் அறியப்படும் மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன் என்ற வெற்றி நாயகனைத் தான். அவரை முன்னோடியாக நினைத்து இப்படி சொல்வது நடிப்புத் துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மட்டும் தானா?
சிந்தித்துப் பார்த்தால் அப்படி சொல்லிவிட முடியாது என்றே சொல்லலாம். அவரது கருத்தில், கொள்கையில் இருந்து மாறுபட்டவர்கள் கூட எம்.ஜி.ஆர் இருந்து இத்தனை காலம் ஆகியும் அவரைப் பற்றி அவதூறாக பேசினால் அரசியலில் பின்னேறுவோம் என்பதை உணர்ந்து அவர் மீது எந்தவித விமர்சனத்தையும் வைக்காமல் சமார்த்தியமாக நழுவுவதை இன்றும் பார்க்க முடிகிறது.
Also Read | #MissYouAmma இளமை முதல் மறைவு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம்
தற்போது அரசியலில் ஈடுபட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு நாயகனாக மாறியிருக்கும் சீமான் (seeman) நேற்று செய்தியாளர்களிடையே பேசியதை ஒரு சிறு உதாரணமாகக் கூறலாம். முதலில் எம்.ஜி.ஆரை (MGR) பாராட்டிய அவர், அடுத்த நொடியே அவர் என்ன பொற்கால ஆட்சி கொடுத்தார் என்று கூறியது, அவரின் அடிமனதிலும் எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் ஆணித்தரமாக பதிந்திருப்பதையே காட்டுகிறது. முதலில் வார்த்தைகளாக அது வெளிபட்டாலும், பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை காட்டுவதற்காக பல்டி அடித்தார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த காலம் தமிழகத்தின் (Tamil Nadu) பொற்கால ஆட்சியாக இருந்ததா? என்ற கேள்விக்கு பதிலை காலம் தான் சொல்லும். காலத்திற்கேற்ப மக்களின் எதிர்பார்ப்புகளும், சமூக போக்கும், கால மாறுதல்களும் தான் ஒரு ஆட்சியை மதிப்பீடு செய்யும். ஆனால், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த காலம் மிகப் பெரிய மாறுதல்களை சந்தித்த கால கட்டமாக இருந்தது.
Also Read | ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா
ஆனால், எம்.ஜி.ஆர் (MGR) இருந்த காலகட்டம் வேறு, இன்று இருக்கும் அரசியல், சமூக சூழ்நிலைகள் வேறு. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலகட்டம் அவர் நடிப்புத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ஆனால் அபோதே அவர் அண்ணா (Anna), கலைஞர் (M.Karunanithi), பெரியார் என்று பலருடன் இணைந்து அரசியலில் செயல்பட்டவர். எம்.எல்.ஏ, தி.மு.க-வின் (DMK) பொருளாளர் என பதவிகளையும் வகித்தவர். பிறகு அரசியலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளாலேயே அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கினார். அது தான் இன்று ஆட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அ.இ.அ.தி.மு.க (AIADMK).
தன்னுடைய கொள்கையை அண்ணாயிசம் என்றார் எம்ஜி.ஆர் (MGR), ஆனால், இன்று அரசியலில் அவரின் பெயரைச் சொல்லும் யாரும், தங்களுடைய கொள்கைகளை எம்.ஜி.ஆரிசம் என்று சொல்லும் தைரியம் படைத்தவர்களா?
சினிமா (Cinemna) கவர்ச்சியை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடித்தார் என்பது எம்.ஜி.ஆர் மீதான விமர்சனமாக இருந்தாலும், அதை தன்னுடைய இறுதி மூச்சு வரை தக்க வைத்துக் கொண்டதற்கு காரணம் எம்.ஜி.ஆர் மட்டுமே. குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு பெண்களின் மத்தியில் இருந்த செல்வாக்கை எந்த சொல்லாலும் விவரித்து விட முடியாது.
எம்.ஜி.ஆர் மனிதாபிமானம் மிக்கவர். எம்.ஜி.ஆரின் மறைந்து 33 ஆண்டுகள் முடிந்த பிறகும் அவரது தாக்கம் தமிழக அரசியலில் (Politics) இன்றும் இருக்கிறது என்றால் அது அந்த கால ரசிகைகளின் விருப்பம் மட்டுமா என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம்.
மக்களின் மனங்களைக் கவர்ந்த தலைவராக பொன்மனச் செம்மலாக போற்றப்பட்டார் எம்.ஜி.ஆர் இருந்தார். எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னால், தங்கள் மீதும் நம்பிக்கை வரும் என்பதாலேயே அவர் பெயர் இன்று வரை அரசியலின் மந்திரச் சொல்லாக இருந்துவருகிறது.
Also Read | ஜெயலலிதாவும் அப்போலோ மருத்துவமனையும்... அந்த 75 நாட்கள் பிளாஷ்பேக்!!
அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் (Election) பரப்புரை மூலமே வெற்றி பெறுவார்கள் என்ற அரசியல் சித்தாந்தத்தையே புரட்டிப் போட்டவர் எம்.ஜி.ஆர். வாய் பேசமாலேயே, உடல் நலக் குறைவுடன் இருந்த நிலையிலும் வெற்றி பெற்றார். அவர் இருக்கும் வரை வேறு யாரும் தமிழக முதலமைச்சராகி (Tamil Nadu Chief Minister) விடமுடியாது என்ற நிலை இருந்ததை எம்.ஜி.ஆரின் மங்கா புகழுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இன்று எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாள். அரசியல் தலைவர்களும், மக்களும் அன்னாருக்கு நினைவாஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edapadi Palaniswamy) அவர்கள், கட்சியின் நிறுவனரும் மூன்று முறை தமிழக முதலமைச்சருமாக கோலோச்சிய எம்.ஜி.ராமசந்திரனின் திருவுருவச் சிலைக்கு மலராஞ்சலி செலுத்தினனார். சமூக ஊடகங்களில் #MGR33 என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது.
"தனது அயராத மக்கள் பணியால், அழியாப் புகழ் பெற்ற தமிழக முன்னாள் முதல்வரும், கழக நிறுவனத் தலைவருமான "பொன்மனச் செம்மல்" புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33-வது நினைவு தினத்தில், புரட்சித்தலைவர் அவர்களுக்கு எனது நினைவஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறேன். #MGR33" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் செய்தியில் பகிர்ந்துள்ளார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR