தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலக் கல்வி கொள்கையை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதற்கு நாம் எடுக்கும் முடிவுகளுக்கே முக்கியத்துவம் தரப்படும் எனவும் கூறினார். நம் மாநிலத்திற்கு அதுதான் நல்லது எனவும் அன்பில் மகேஷ் கூறினார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் 8 பேருக்கு BA5 மற்றும் 4 பேருக்கு BA4 வகை கொரோனா
ஜூன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - அன்பில் மகேஷ் அழைப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR