தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலியை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வருங்கால தமிழ்நாட்டை வழிநடத்த இருக்கின்ற திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் என கூறி பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தஞ்சையை பொருத்தவரை மும்முனை போட்டி தான் உள்ளது. அதாவது, போட்டி என்பது தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனுக்கா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணா துரைக்கா, திருவாரூர் மாவட்ட செயலாளர்பூண்டி கலைவாணனுக்கா என்பது தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு! தமாகா-வில் விழுந்த அடுத்த விக்கெட்


இவர்கள் மூன்று பேரில் யார் அதிகமாக வாக்குகள் வாங்குகிறார்கள் என்பது தான் நமக்கான போட்டியாக உள்ளது. சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி பூண்டி கலைவாணனுக்கு, மூன்று தொகுதி துரை சந்திரசேகரனுக்கு, இரண்டு தொகுதி அண்ணாதுரைக்கு போகிறது. சதவீத அடிப்படையில் ஆறு தொகுதி வருகிறது. இதில் யார் அதிகப்படியாக வாக்குகள் வாங்குகிறார்களோ அவருக்கு 6 பவுன் செயின் நான் வாங்கி போடுகிறேன். 


ஒரே பரிசு 6 பவுன் யாருக்கு போகிறது என்பதுதான் போட்டி என்றார் அமைசர் அன்பில் மகேஷ். மேலும், இன்றைக்கு தேர்தல் களம் தயாராக இருக்கிறது. இன்றைக்கு ஒட்டுமொத்தமாக பெண்களின் ஓட்டு திமுகவுக்கு தான் உள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தால் மட்டும் போதாது. நாம்தான் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற பெருமை தஞ்சைக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.


தஞ்சாவூர் தொகுதியில் இம்முறை முரசொலி எம்பி வேட்பாளராக திமுகவில் போட்டியிடுகிறார். தற்போது சிட்டிங் எம்பியாக இருக்கும் எஸ்எஸ் பழனிமாணிக்கத்துக்கு திமுக இம்முறை வாய்ப்பு கொடுக்கவில்லை. 6 முறை எம்பியாக இருந்த அவர் இம்முறை ஓரங்கட்டப்பட்டு புதியவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் புதியவருக்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுத்துள்ளது. முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த 6 பவுன் தங்கச் சங்கிலி பரிசு அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ