தமிழக இளைஞர்கள் அரசு வேலையை மட்டும் நம்பி இருக்க கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீள்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வளக்கல்லூரியில் நடைப்பெற்ற இந்த கலைந்தாய்வில் பங்கேற்ற மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ஆணையினை வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர்., "நீட் தேர்வு குறித்தும், ஹைட்ரோ கார்ப்பன் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது இளைசர்களின் வேலைவாய்ப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அரசு வேலைக்காக காத்திருக்காமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வர வேண்டும், 65 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றார். அவர்களுக்கு முடிந்த அளவிற்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு, அதற்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் அரசின் மீது குற்றம் சுமத்த முடியாததால், நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், சட்டம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் போதிய விளக்கம் அளித்திருப்பதாகவும், நீட் வர முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள் திமுக, காங்கிரஸ் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.


தொடர்ந்து பேசிய அவர் வேலூர் திமுக-வின் வெற்றுக்கோட்டையாக தான் மாறும், அதிமுக வேலூர் தேர்தலில் மாபெரும் வெற்றியை சந்திக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.