சட்டப்பேரவையில் சூசகமாக கலாய்த்துக்கொண்ட துரைமுருகன் - பொன்முடி
இப்போலாம் பெண்கள் Co-Education என்றெல்லாம் பார்ப்பதில்லை, எந்தக் கல்லூரியாக இருந்தாலும் படிக்கிறார்கள் - அமைச்சர் பொன்முடி
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய பேரவையின் கேள்வி நேரத்தின் போது, சட்டபேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் பொன்முடி பதில் அளித்துக்கொண்டிருந்தார். இதில் கடைசியாக அமைச்சர் துரைமுருகன் அடித்த கமெண்ட், சட்டப்பேரவையை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
கேள்வி நேரத்தின் போது, சட்டபேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுந்து, ‘கே.வி.குப்பம் பகுதிக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும். இப்போது அங்கு இருபாலினர் படிக்கும் கல்லூரிகளாக இருக்கிறது. பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் இருபாலினர் கல்லூரிக்கு மாணவிகளை அனுப்பாமல் இருக்கின்றனர். இதனால், அவர்கள் வாழ்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால், பெண்களுக்கென்று தனியார் பெண்கள் கலைக் கல்லூரி வேண்டும்’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, ‘வேலூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் அதிகளவில் இயங்கி வருகிறது,.வேலூர் சேர்காடு பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார். அதனால் இப்போது கல்லூரி தொடங்கும் நோக்கம் இல்லை. அதேபோல், குடியாத்தம், காட்பாடி போன்ற இடங்களிலும் கல்லூரி உள்ளது. எனவே, கல்லூரிகள் இல்லாத தொகுதிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நான் குடியாத்ததில் பணியாற்றி உள்ளேன். அங்கு Co-Education கல்லூரி பிரமாதமாக இருக்கிறது. பெண்கள் Co-Education போன்றவையெல்லாம் பார்ப்பதில்லை. பெண்கள் எந்த கல்லுரி என்றாலும் படிக்கிறார்கள்’ என தெரிவித்தார்.
இதற்கு சட்டபேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி, ‘அமைச்சரின் பதில் தொகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. அவர்களுக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக என்னைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்’ என கூறினார்.ய
மேலும் படிக்க | ஆளுநருக்கு மாளிகை எதற்கு? சட்டப்பேரவையில் கொதித்த எஸ்.எஸ்.பாலாஜி
இதற்கு அமைச்சர் பொன்முடி, ‘அந்தத் தொகுதியில் அரசு கல்லூரி உள்ளது. அதில் காலியிடங்களும் உள்ளது. அதை முதலில் நிரப்ப வேண்டும். உங்களை சந்திக்க வருபவர்களை அந்தக் கல்லூரியில் படிக்க சொல்லுங்கள். நீங்கள் வைக்கும் கோரிக்கை தவறு இல்லை. தற்போது அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வரும் காலங்களில் நிதி நிலைக்கு ஏற்ப தொகுதி மக்களுக்கு தேவை இருக்கும் என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என பேசினார்.
அப்போது குறுக்கீடு செய்த அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ‘இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன ஒரே மந்திரி இவர் ஒருவர் தான்’ என தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் பொன்முடி, ‘இந்தப் பதிலை சொல்லச் சொன்னவரே இவர்தான். குடியாத்தம், காட்பாடில ஏற்கனவே கல்லூரி இருக்கு என சொன்னார். இந்த பதிலுக்காக என்னைப் பாராட்டி உள்ளார், அதற்கு
நன்றி’ என தெரிவித்தார்.
துரைமுருகன் - பொன்முடி பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
மேலும் படிக்க | அன்பில் மகேஷுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR