தமிழ்நாடு சட்டப்பேரவையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி ஏப். 6ஆம் தேதி வெளியிட்டார். அந்த அறிவிப்புகளை ஒவ்வொன்றாக கீழே காணலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 - திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் கிடங்கு வளாகத்தில் உள்ள காலி இடத்தில் கூடுதலாக 3400  மெட்ரிக் டன்  கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


- அரியலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்குகள் 7 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியின் கீழ் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.


- பொது விநியோக திட்ட செயல்பட்டினை வட்டளவில் துரிதப்படுத்த வகையில் மூன்று மாவட்டங்களில் 8,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மூன்று புதிய வட்ட செய்முறை கிடங்குகள், கிடங்கு அலுவலகங்கள், சுமை தூக்குவோர் ஓய்வறைகள், உள்ளிட்ட 15 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவி உடன் கட்டப்படும்.



மேலும் படிக்க | ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்... 'சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே சரி' - இப்போது என்ன பிரச்னை?


- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொது விநியோகத் திட்டம் பொருட்களின் சேமிப்பு கொள்ளளவினை மேம்படுத்தும் வகையில் 9000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நான்கு புதிய சேமிப்பு கிடங்குகள் 15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். திருவள்ளூர், மதுரை, விருதுநகர் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்.  


- டெல்டா மாவட்டங்களில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் 45 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவி உடன் அமைக்கப்படும்



- செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 52 ஆயிரம் மெட்ரிக் டன்  கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். 


- சென்னையில் கோபாலபுரம் மற்றும் அண்ணா நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இரண்டு அமுதம் பல்பொருள் அங்காடிகள் பொதுமக்களின் வசதிக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். 


 - 2023 ஆம் ஆண்டு ஐநா சபையில் சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


- நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட விநியோகம் க்யூ ஆர் கோடு உதவியுடன் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும்.


- குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத் துறையில் வெளி முகமை மூலம் பணியமர்த்தப்படும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 


மேலும் படிக்க | பாஜக தலைமையில் தான் கூட்டணி... அதிமுகவுக்கு செக் வைக்கும் அண்ணாமலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ