கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலின் பொது தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், நாளை நடைபெறவுள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து தீட்சிதர்களிடம் அவர் எடுத்துரைத்தார். அதனை சட்டப்படி எதிர் கொள்வதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர். அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தீட்சிதர்கள் தங்களின் நிலைபாடு குறித்து கருத்து தெரிவித்ததாகவும், அரசின் நிலைப்பாடு, இந்து சமய அறநிலையத்துறை சட்டங்கள் குறித்து தங்களது தரப்பில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறினார். விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார். 


மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி



அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கொள்ளைகாரர்களின் கூடாரமாக உள்ளது என மதுரை ஆதீனம் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளவே அப்படி பேசியுள்ளார். மற்ற ஆதீனங்கள், ஜீயர்கள், தீட்சிதர்கள் நமது அரசோடு இணக்கமாக உள்ளனர். நமது அரசு அமைவதற்கு தீட்சிதர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். எனவே ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைகூறக் கூடாது. அவரது பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.


விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலை ஏற்படும். ஆத்தீகர்கள், நாத்தீகர்கள் என அனைவருக்கும் சமமான ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி உள்ளது. நாளை சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற உள்ள ஆய்வு குறித்து அறநிலையத்துறை சார்பாக 3 முறை தீட்சிதர்களிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. தீட்சிதர்களும் தங்களது சார்பாக பதில் கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசனை செய்து சுமூக தீர்வு காணப்படும் எனக் கூறினார்.


மேலும் படிக்க | நடிகர் விஜயின் படத்தை பார்க்காதீர்கள்: மதுரை ஆதினம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR