போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அமைச்சர் மகள் : காரணம் என்ன?!
அமைச்சர் சேகர் பாபுவின் மகள் திருமணம் செய்து கொண்டு போலீஸ் பாதுகாப்பு வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று தனது கணவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் " நானும் என் கணவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இரண்டு பேரின் விருப்பத்தின்படி தான் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் மேஜர், என்னை கட்டாயப்படுத்தி யாரும் திருமணம் செய்து வைக்கவில்லை. நான் மருத்துவம் படித்துள்ளேன், எனது கணவர் டிம்ளோமோ படித்துள்ளார்.
மேலும் படிக்க | விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்!
எனது கணவரையும், அவரது குடும்பத்தையும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தமிழ்நாடு போலீஸ் எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அமைச்சரின் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை கூறப்படவில்லை. இவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் திருமணம் செய்ய விரும்பி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். ஆகஸ்ட் 18-ம் தேதி இவருவரும் மும்பையில் தஞ்சமடைந்தனர்.
அந்த சமயத்தில் சேகர்பாபு தனது மகளின் காதலன் மீது எப்ஐஆர் பதிவு செய்தார். பின்பு மகளை சென்னைக்கு அழைத்து வந்து வீட்டில் வைத்து இருந்தார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR