சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூழ்நிலையில், நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையிட்டார்.  முறையீட்டை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவை நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!


சிறையில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை பல கட்டங்களாக சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிக்கை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகும் சென்னை கோவை கரூர் நாமக்கல் ஆகிய ஊர்களில் பல்வேறு இடங்களில் அமலாக்குத்துறை அதிகாரிகளின் மறுபடியும் அதிரடி சோதனைகளை நடத்தினர். மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்பான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இன்னும் பல ஆதாரங்களை தேடுவது உறுதி செய்துள்ளது.  செந்தில் பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்த பண பரிவர்த்தனைகள் சொத்து ஆவணங்களை அமலாக்கத் துறை தேடுகின்றதா என விவாதமும் எழுந்துள்ளது. 


மேலும் சமீபத்தில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் கரி கையாளும் பணி மற்றும் சாம்பல் கையாளும் பனி குறித்து வருமான வரிதுறை அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.  மேலும் சென்னை ராதா இன்ஜினியரிங் துணை நிறுவனமான திவ்யா ட்ரேடர்ஸ் என்ற சாம்பல் கையாளும் நிறுவனத்தின் கணக்குகள் குறித்தும் சோதனை நடத்தினர்.  இதேபோன்று தூத்துக்குடி துறைமுகத்தில் கரி கையாளும் தளத்தில் செயல்பட்டு வரும் சென்னை ராதா இன்ஜினியரிங் சார்பில் கப்பலில் இருந்து கரி இறக்கும் பகுதி என இரண்டு இடங்களிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் துறைமுகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க - அரியலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ