கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் "ஒற்றுமை இந்தியா மாநாடு" என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வர், டெல்லி முதல்வர், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், தேவகவுடா, ஜிக்னேஷ் மேவானி, காஷ்மீர் தலைவர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். 


பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் சுதந்திர போராட்டம். வரும் மக்களவை தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டமாக அமையும். ஊழல்களை ஒழிப்பேன் எனக்கூறிய மோடியின் பாஜக கட்சி பல ஊழல்கள் செய்து உள்ளது. அவர்களை அகற்ற நாம் அனைவரும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த வேண்டும். அவர்களுக்கு நம்மை பார்த்து பயம் வந்துவிட்டது. எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. பேரணி என்ற பெயரில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 10 பொய்களை மோடி பேசி வருகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.