சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் - முழு விவரம்!
இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
ஆளுநர் ஆர்என் ரவி தொடர்பாக சட்டபேரவையில் தீர்மானத்தை இன்று துரைமுருகன் கொண்டு வந்தார். பேரவையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு எண்ணி கழிக்கும் முறையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பு முறையில் 4ல் 3 பங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வாக்கு எண்ணிக்கை அவசியம். தமிழக சட்டபேரவையில் பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெற்றது. பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை சட்டமியற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும், பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஓட்டெடுப்பின் பொது பேரவையில் அனைத்து கதவுகளையும் மூட சபாநாயகர் உத்தரவிட்டார். அதிமுக ஏற்கனவே அவையை விட்டு வெளியேறியதால், பாஜக எம்எல்ஏகள் வெளியேற அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மனுத்து விட்டார், கதவுகள் மூடப்பட்டு விட்டதால் இனி வெளியேற முடியாது என சபாநாயகர் அறிவுரை வழங்கினார். ஆளுநருக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏகள் எம்ஆர் காந்தி, சிகே சரஸ்வதி இருவரும் எதிர்த்து வாக்களித்தனர், நயினார் நாகேந்திரன், வானதி அவையில் இல்லை. இந்த வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 பேர் எதிர்த்து வாக்களித்து உள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
ஒன்றிய அரசு- மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா, “ஆளுநர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக” (Governor should be a Detached figure) இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதே கருத்தை அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய பிரதமராக இருந்து வாஜ்பாய் அவர்கள் 2000-ஆம் ஆண்டு நியமித்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கையும் இதையே வலியுறுத்தியது. அரசியல் சட்டத்தின் தந்தை என நாம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராக செயல்பட வேண்டும்” (Governor Should be a constitutional Governor with no power of interference in the administration of province” என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தியிருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நியமித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி தலைமையிலான “ராஜமன்னார்குழு” ஒன்றிய அரசு- மாநில அரசு உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில்- “ஆளுநர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது” என்று பரிந்துரைத்து. இதே மாபெரும் மன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு- மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வரலாறு. 2010-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “ஆளுநர் நியமிக்கப்பட்டு விட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல” (Once appointed as Governor they owe allegiance to the Constitution and not to any political party) என்று “பி.பி. சிங்கால்” வழக்கில் மிகத் தெளிவாகவே வரையறுத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் இருக்க வேண்டும்” (Governor should be a guide, philosopher and friend of the Ministry as well as the people in General” என்று எத்தனையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு- தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக ஆக இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ