Coimbatore CM Photo Gallery Exhibition: கோவை வ.உ.சி மைதானத்தில், "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சி கடந்த ஏப். 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை தினமும் பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் - ராஜலட்சுமி ஆகியோர் இந்த வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சியை இன்று (பிப். 9) பார்வையிட்டனர்.
புகைப்படங்களை பார்த்து வியந்தவர்கள் நொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது,"அனைவருக்கும் வணக்கம், கோவை வ.உ.சி பூங்காவில் முதல்வர் 50 ஆண்டுகால புகைப்பட கண்காட்சி பார்த்தோம், முதல்வரின் உழைப்பு, அவர் கடந்து வந்த பாதை, அனைத்தும் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்து தொண்டராக, இளைஞரணி செயலாளராக, கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே பொது வாழ்க்கையில் அர்ப்பணித்து பல கஷ்டங்களை அனுபவித்து இன்றைக்கு அவர் நம்முடைய முதல்வராக வந்துள்ளார். உண்மையில் அவர், பட்ட கஷ்டங்கள் உழைப்புக்கு கிடைத்த மக்கள் கொடுத்த அன்பு வெற்றியைத் தான் பார்க்க வேண்டும்" என செந்தில் கூறினார்.
தொடர்ந்து ராஜலட்சுமி கூறும்போது,"இதனை ஒரு மணி நேரம் பார்த்தால் போதாது. இதனை பார்க்கும்போது முதல்வர் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த அந்த புகைப்படங்கள் பேசுகிறது. ஒரு வருடம் சிறையில் இருந்த காட்சியை பார்க்கும்போது மிகவும் நெகிழ்வாக இருந்தது. ஒரு தலைவன் எப்படி எல்லாம் உருவாகி இருக்கிறார் என்பது மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இப்படி ஒரு பிரம்மாண்டமான ஏற்பாட்டில் நாங்கள் வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
மேலும் படிக்க | சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை! முக ஸ்டாலினை புகழ்ந்த ஜிவி பிரகாஷ்!
முதல்வர் திட்டத்தை உருவாக்கி மக்களிடத்தில் இதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. முதல்வர் நல்ல தந்தையாக, மகனாக, தொண்டனாக, தலைவனாக இருந்திருக்கிறார். எங்கள் முதல்வர் எங்கள் பெருமை. பெரியாருடன் முதல்வர் நின்ற புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. இட்லி செந்திலுக்கு பிடிக்கும். அதேபோல முதல்வருக்கு, அவரது துணைவியார் இட்லி பறிமாறும் புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்தது. இசைக்கருவி வாசிப்பது போல புகைப்படம் அதுவும், எங்களுக்கு மிகவும் பிடித்தது.
மிசாவில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். அவர்பட்ட கஷ்டங்கள் பயங்கரமாக அவரை உயர்ந்தியுள்ளது. சித்தரவதை அனுபவித்துள்ளார், மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து இன்றைக்கு தமிழ்நாட்டுடைய முதல்வராக அழகாக ஆட்சி செய்து வருகின்றார்.
முதல்வருடைய பணி சிறக்க நாங்கள் வாழ்த்துகிறோம். அன்பு மட்டுமே நாங்கள் கொடுக்க முடியும், முதல்வரின் சேவை இன்னும் தொடர வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறோம். பெருநகரங்களில் இது போன்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது போல, கிராம பகுதிகளிலும் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மண்டல தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ