திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி நாளை (ஜூலை 27) தொடங்கும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 26) திருச்சி செல்கிறார். தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் சங்கமம் 2023 என்ற வேளாண் கண்காட்சி கருத்தரங்கு திருச்சியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நாளை (ஜூலை 27) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 230 உள்ள அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 9 மணியளவில் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு 11 மணிக்கு புறப்பட்டார். திருச்சியில் இன்றும், நாளையும் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்கும் அவர், நாளை காலை 10:45 மணிக்கு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 14 திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி வந்து இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்.


தேர்தல் வியூகம்


முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது, திமுகவின் பாராளுமன்ற தேர்தல் பணியை தொடங்கிவைத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார். டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA 2) பயிற்சி பாசறைக் கூட்டம் நாளை காலை திருச்சி கருமண்டபம் ராம்ஜி நகரில் நடைபெறுகிறது.


மேலும் படிக்க | தமிழக ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை? அடுத்த திட்டம் என்ன?


இதில் திருச்சி அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 15 கட்சி மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மொத்தம் 12 ஆயிரத்து 645 பேர் கலந்துகொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசுகிறார். தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார்.


கூட்டணிக்கு ஒதுக்கீடு?


பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தான் இந்த தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதில் புதிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்பதால் இருக்கிற கட்சிகளுக்கு அதே தொகுதியை ஒதுக்கலாமா? அல்லது புதிய தொகுதிகளை வழங்கலாமா? என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிப்பார் என தெரிகிறது.


இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணி உருவாகியுள்ளது. இதில், திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்து பங்கெடுத்துள்ளன. எனவே, பாஜகவை வீழ்த்தும் வியூகத்தை ஸ்டாலின் தற்போதே தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் நடைபெற சுமார் 10 மாதங்கள் இருக்கும் சூழலில் அதற்கான பணியை தொடங்கியிருப்பது கூடுதல் பலனளிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.  
 
மேலும் படிக்க | மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் முடிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ