தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார். பல முக்கிய விஷயங்களைக் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசுத் தலைவரை சந்தித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், “முதல்முறையாக இன்று குடியரசுத் தலைவரை சந்தித்தேன். தமிழ்நாட்டின் முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை தலைமைத் தாங்கி நடத்த குடியரசுத்தலைவருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். அந்த விழாவில் சட்டமன்ற வளாகத்துக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்ற விவரத்தையும் நான் அவரிடம் தெரிவித்திருக்கிறேன்.” என்று கூறினார்.


குடியரசுத் தலைவருடனான தனது கலந்துரையாடலைப் பற்றி மேலும் கூறிய முதல்வர் ஸ்டாலின் (CM Stalin), “மதுரையில் கலைஞர் கருணாநிதியின் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, சென்னை கடற்கரை சாலையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருப்பதை குறிக்கும் வகையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்திக்கொடுக்க தமிழகம் வருமாறு நான் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.” என்று தெரிவித்தார்.


ALSO READ: கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை


இந்த விழாக்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


மேகதாது அணை (Mekedatu Dam) விவகாரம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் பிரதமர் மோடியும் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். இந்த விஷயத்தில் கர்நாடகா அரசுடன் பேசவோ, ஆலோசனை நடத்தவோ எதுவும் இல்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியும், நீர்வளத்துறை அமைச்சரும் இதில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். 


மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு நடந்துவருவதால், அதில் முறையான ஒரு தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


குடியரசுத் தலைவருடனான (Indian President) தனது சந்திப்பைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டானின், “மாண்புமிகு @rashtrapatibhvn அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்.” என்று எழுதியுள்ளார்.



ALSO READ: முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம்; குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR