கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளையும், பிற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றின் அளவு குறைந்து வந்தாலும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருத வேண்டாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2021, 09:52 AM IST
கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை title=

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, நாள் ஒன்றுக்கு புதிய தொற்று பாதிப்புகள் 36,000 என்ற அளவில் இருந்தன. பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட முழு ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுகாதர அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி ஏற்படும் புதிய தொற்று பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழ் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது” என்றார்.

மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளையும், பிற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றின் அளவு குறைந்து வந்தாலும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருத வேண்டாம். கொரோனா மூன்றாவது அலை வந்தால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்பதை மக்கள் நினைவில் கொள்ள் வேண்டும் . அதனால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.

கொரோனா 3வது அலை வந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read | கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

தமிழ்நாட்டில், நேற்று,  2,079 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,35,402 ஆக அதிகரித்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 என்ற அளவில் உள்ளது.

Also Read | ஜூலை 18: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2079, 29 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News