சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்திய மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்று புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு தினமும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு கொரோனா பரவாலைக் கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அவர் சந்திப்புக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், கொரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவே முதல்வர் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்தன.     


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர். 


இதற்கிடையில், கொரோனா (Coronavirus) நிவாரண நிதிக்காக ஆளுநர் ஒரு கோடியோ ரூபாய் அளித்துள்ளதாக எமது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என கூறப்படுகிறது.   


ALSO READ: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் துவங்கியது


முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கொரோனா பணி நிவாரண நிதி வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருவதை நாம் கண்டு வருகிறோம். நடிகர்கள் சிவகுமார், அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள், எஸ்.ஆர்.எம் குழுமம் என பல தரப்பிலிருந்து நிதி உதவி வந்த வண்ணம் உள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.


கொரோனா காரணமாக அரசு நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கான (Government Employees) ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.


ALSO READ: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கு இல்லை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR