அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு

கொரோனா தொற்றால் ஏற்பட்ட  நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2022 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 14, 2021, 07:09 PM IST
  • தமிழக அரசு ஊழியர்களுக்கான மிகப்பெரிய செய்தியை அரசு வெளியிட்டுள்ளது.
  • அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்து வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கொரோனாவால் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான மிகப்பெரிய செய்தியை அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்து வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று (Coronavirus) அனைத்து மக்களையும், அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை சமாளிப்பதற்கும், அதற்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசுக்கும் பெரிய அளவிலான நிதித்தேவை ஏற்படுகின்றது. 

இந்த நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2022 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது.

ALSO READ: மருத்துவமனைகளில் உயிர்காக்கும் வசதிகளை உறுதி செய்க: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திலும் (Tamil Nadu) ஒரு நாள் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. தொற்று அதிகரித்துக்கொண்டு இருப்பதால், பலவித அடிப்படை மருத்துவ வசதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா பரவலைத் தடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னதாக, தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர, தமிழக அரசு மே 10 முதல் மே 24 வரையிலான முழு ஊரடுங்குக்கான அறிவிப்பை வெளியிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஏற்கனவே கொரோனா பணி நிவாரண நிதி வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருவதை நாம் கண்டு வருகிறோம்.

தற்போது கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என கூறப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு சம்பளத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குரிப்பிடத்தக்கது. 

நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,621 ஆக பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,99,485 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தமிழகத்தில் 297 பேர் தொற்று பாதிப்பால் இறந்தனர். அதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 16,768 ஆக உயர்ந்தது. 

ALSO READ: கொரோனா பாதிப்பு: முதல்வர் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News