தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கு இல்லை?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை முதல் மேலும் சில கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2021, 08:04 PM IST
  • நாளை முதல் தேநீர் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வெண்டும்.
  • பூ, பழங்கள், காய்கறிகள் விற்கும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி இல்லை.
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கு இல்லை? title=

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை முதல் மேலும் சில கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அறிவுக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

- நாளை முதல் தேநீர் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

- மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்.

- கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வெண்டும்

- பூ, பழங்கள், காய்கறிகள் விற்கும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி இல்லை.

- ஞாயிறு முழு ஊரடங்கு மே 23 வரை தொடரும்.

- மின் வணிக நிறுவனங்களுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி.

- மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும்

- மீன், இறைச்சிக் கடைகளை பல்வெறு இடங்களுக்கு மாற்ற மாநகராட்சிக்கு உத்தரவு.

ALSO READ: அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு

இது குறித்து வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை இதோ:

No description available.

 

No description available.

No description available.

No description available.

 

ALSO READ: மருத்துவமனைகளில் உயிர்காக்கும் வசதிகளை உறுதி செய்க: எடப்பாடி பழனிசாமி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News