தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் துவங்கியது

திமுக-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாயை இன்று முதல் வழங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2021, 12:40 PM IST
  • குடும்ப அட்டைதாரர்களுக்கான 2000 ரூபாய் நிவாரண நிதி இன்று முதல் வழங்கப்படுகின்றது.
  • இந்த திட்டத்தை 10 ஆம் தெதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
  • டோக்கன்கள் வழங்கப்பட்டு முறையே நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் துவங்கியது title=

சென்னை: கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகின்றது. 

முன்னதாக, திமுக-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாயை இன்று முதல் வழங்குகிறது. 

இந்த திட்டத்தை 10 ஆம் தெதியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். நியாய விலைக் கடைகளில் நிவாரணம் நிதியை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. 

டோக்கன்கள் வழங்கப்படுகின்றன

தற்போது கொரோனா (Coronavirus) இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக உள்ளபடியால், நிவாரண நிதியை பெற நியாய விலை கடைகளுக்கு வருபவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில், அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. கூட்ட நெரிசலின்றி, நிவாரண நிதியை மக்களுக்கு வழங்க டோக்கன் முறை பின்பற்றப்படும் என கூறப்பட்டது. 

அதேபோல், டோக்கன்கள் வழங்கப்பட்டு முறையே நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. தனிமனித இடைவெளியை பின்பற்றி மக்கள் வரிசையில் நின்று நிவாரணத் தொகையை பெற்றுச் செல்கின்றனர். 

ALSO READ: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கு இல்லை?

ஒரு நியாயவிலை கடையில் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும்?
மக்கள் கூட்டம் அதிகமாவதைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நபர்களுக்கே நிவாரண நிதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 நபர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். அட்டைதாரர்கள் தங்களது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நியாய விலை கடைகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளலாம். 

எத்தனை பேருக்கு நிவாரண நிதி கிடைக்கும்?
தமிழகத்தில் இந்த கொரோனா நிவாரண நிதி 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு (Tamil Nadu Government) மொத்தமாக 4 ஆயிரத்து 153 கோடியே 33 லட்சம் ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நிதி நெருக்கடியில் அரசு
கொரோனா காரணமாக ஏற்கனவே அரசு நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஏற்கனவே கொரோனா பணி நிவாரண நிதி வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருவதை நாம் கண்டு வருகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலிலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் தவணையை அளிக்கத் தொடங்கியதற்காக பொது மக்கள் அரசை பாராட்டி வருகின்றனர். 

ALSO READ: அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News