சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆறாவது முறையாக தமிழகத்தை ஆள தனது கட்சிக்கு வாய்ப்பு அளித்ததற்காக மாநில மக்கள் அனைவருக்கும் தனது 'மனமார்ந்த நன்றியை' தெரிவித்த ஸ்டாலின் (MK Stalin), "இந்த கூட்டணிக்கு பெரிய ஆதரவை அளித்து வெற்றி பெற வைத்தற்கு தமிழக மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். பதவியேற்பு விழா பற்றி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பேன்." என்று கூறினார்.


தி.மு.க (DMK) தலைவர் மேலும் கூறுகையில், "என்னை வாழ்த்திய தேசியத் தலைவர்களுக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் ஆலோசனையை ஏற்று நான் செயல்படுவேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்களின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்டி முறையாக தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்." என்றார்.


தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, திமுக 122 இடங்களை வென்றுள்ளது. மாநிலத்தின் மொத்த 234 இடங்களில் 20 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதிமுக 67 இடங்களை வென்று 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


ALSO READ: தமிழகம்: அமோக வெற்றி வெற்று அடுத்த முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்


தமிழகத்தில் கடந்த காலங்களில், 2006-11, 1996-2001, 1989-91, 1971-76 மற்றும் 1967- 71 என திமுக ஐந்து முறை ஆளும் கட்சியாக இருந்துள்ளது.


"திமுக ஆட்சி அமைத்தால், அவர்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்து மக்கள் தங்கள் பெரிய ஆதரவை எங்களுக்கு வழங்கியுள்ளனர்" என்று ஸ்டாலின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கட்சி மக்களுக்காகவும் மாநிலத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கு கிடைத்த வெற்றியாகும் இது என்றார் அவர். மேலும், கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான கனவை நிறைவேற்ற தொண்டர்கள் ஆற்றிய பணிகளுக்கும் கடின உழைப்புக்கும் இந்த வெற்றி ஒரு அங்கீகாரம் என்று தெரிவித்தார் ஸ்டாலின். 


இதற்கிடையில், பிரதமர் மோடி (PM Modi) தனது ட்வீட் மூலம், மு.க ஸ்டாலினுக்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். "திரு ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்! தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக @mkstalin மற்றும் @arivalayam-க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றம்,  தமிழ்நாட்டின் தேவைகள், COVID-19 தொற்றுநோய் ஆகியவற்றில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்." என்று எழுதியுள்ளார் பிரதமர் மோடி.


ALSO READ: DMK மூத்தத் தலைவர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR