MSME கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
கொரோனா காலத்தில் பல வித பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், மாநில முதல்வர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா காலத்தில் பெரிய தொழிலதிபர்கள் முதல் சிறிய வணிகர்கள் வரை அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரது வாழ்வாதரம் பெரிய சவாலாக மாறியுள்ளது. பணம் படைத்த சில தொழிலதிபர்களால் இதை தாங்கிக்கொள்ள முடிந்தாலும், சிறு தொழில் செய்யும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
இவர்களின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரி பன்னிரண்டு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது அவர் எடுத்துள்ள மிகப்பெரிய முன்முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையை எடுத்து கூறியுள்ள தமிழக முதல்வர், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசை வலியுறுத்த வேண்டும் என அவரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ALSO READ: 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்ட தமிழக அரசு -முழுவிவரம்
மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இந்த கோரிக்கையை விடுத்தால், இதுவும் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் மத்திய அரசு (Central Government) தடுப்பூசி கொள்கையை மாற்றிக் கொண்டது என்பதையும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா காலத்தில் பல வித பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், மாநில முதல்வர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து கோடி ரூபாய் வரை கடன் தொகை நிலுவையில் உள்ள சிறு கடனாளர்களுக்கு ஆறு மாதம் அவகாசம் தர வேண்டும் என்று கடிதத்தில் மு.க.ஸ்டாலின் (MK Stalin) குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஓடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ALSO READ: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR