சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு குற்றவாளிகளின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எஸ்.நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் (Perarivalan), ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகியோரை விரைவில் விடுவிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து கோரி வருவதாக குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் கூறியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக இவர்கள் சிறைவாசத்தின் வேதனையை அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 



இது தமிழக மக்களின் விருப்பமாகவும் உள்ளது: மு.க. ஸ்டாலின்
இந்திய அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் நளினியின் மரண தண்டனையில் ஏற்பட்ட மாற்றத்தை ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும் மற்ற மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனையையும் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியது என்பதையும் சுட்டிக் காட்டினார்.


"தமிழ்நாட்டின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் 7 பேரது தண்டனை நீக்கப்பட்டு அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக கொடுமையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பமாகவும் உள்ளது" என்று முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) கூறினார்.


ALSO READ: பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு


ஏழு குற்றவாளிகளுக்கும் மீதமுள்ள தண்டனையை நீக்குவதற்கும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு 2018 செப்டம்பரில் பரிந்துரைத்ததையும் அவர் மேற்கோள் காட்டினார்.


'மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆயுள் தண்டனையை நீக்க உத்தரவு அளிக்க வேண்டும்' 
2018 ஆம் ஆண்டின் பரிந்துரைக்குப் பிறகு, தண்டனையை நீக்குவதற்கான மனுவைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்கு உள்ளது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.


கடந்த மூன்று தசாப்தங்களாக ஏழு குற்றவாளிகளும் பெரும் சோதனைகளை அனுபவித்து விட்டார்கள். ஏற்கனவே சொல்லமுடியாத கஷ்டங்களையும் வேதனையையும் அவர்கள் சந்தித்து விட்டார்கள் என்று முதலவர் கூறினார். மேலும் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயின் தற்போதைய சூழ்நிலைகளில், சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நீதிமன்றங்களின் யோசனைகளையும் முதல்வர் சுட்டிக்காட்டினார். 


ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான கோரிக்கையை ஏற்று செயல்படுவதில் ஏற்கனவே அதிக தாமதம் ஏற்பட்டு விட்டது என கூறிய தமிழக முதல்வர், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு இந்திய குடியரசுத் தலைவரை கேட்டுக்கொண்டார். 


திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏழு குற்றவாளிகளின் விடுதலையை உறுதி செய்வதற்கான முயற்சிகளை எடுப்பதாக கூறியிருந்தது.


ALSO READ: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்புப்பணி குறித்து முதலமைச்சர் ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR