மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |அதிமுக நிலை கவலை தருகிறது - கவலைப்படும் காங்கிரஸ் எம்.பி.,


‘அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜீலை 11 ஆம் தேதி எடப்பாடி கே.பழனிச்சாமி பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஒ.பி.எஸ் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள்.  


ஒ.பி.எஸ் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டி காட்ட கடமைப்பட்டுள்ளோம். 2021 சட்டமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஒ.பி.எஸ்ஸின் நெருங்கியவர்களுக்கு கூட அவர் பிரச்சாரம் செய்யவில்லை. ஒ.பி.எஸ் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். 


ஒ.பி.எஸ்-க்கு அதிமுகவில் எந்தவொரு செல்வாக்கும் இல்லை. தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஆனால், ஒ.பி.எஸ் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி உள்ளார். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள் துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்கக் கூடாது. ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை.


ஒபிஎஸ்-க்கு எதிராக எந்த சதி வளையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை. 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு ஒ.பி.எஸ்-ம் ஒரு காரணம். தோல்வி ஏற்படும் என நினைத்து இருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒ.பி.எஸ் தடுத்து நிறுத்தி இருக்கலாமே.?. பதவி நீக்கம் செய்வதற்கு முன் ஒ.பி.எஸ் பதவியை விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. எனவே, அதிமுகவை நிர்வகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் OPS. எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஒபிஎஸ்’ என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். 


மேலும் படிக்க | கட்சி பிளவுப்பட்டால்... எம்ஜிஆர் உயிலில் சொல்லியிருப்பது என்ன?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR